புதுவை சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி சமுதாய நலப்பணித்திட்ட தொடக்க விழா நடந்தது பள்ளி முதல்வர் கவுரி தலைமை உரை ஆற்றினார் .
நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பேராசிரியர் அருள் அரசி சிறப்புரையாற்றினார் . மாணவிகள் உற்சாகமாக செயல்படுவதை பாராட்டினார் . சமுதாய நலத்திட்ட மாநில அலுவலர் மதிவாணன் பெயர் பலகை திறந்து வைத்து நோக்க உரையாற்றினார் . இந்நிகழ்ச்சியில் புதுமை பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பழைய மோட்டார் வாகனங்களால் காற்று மாசுபடுவதை கூறினார்.
சுற்றுப்புறச் சூழல் செயல் அலுவலர் ஜெகன் மாணவர்களும் காற்று , இயற்கை மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் . மாணவிகளும் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டு கலந்துரையாடலில் பங்கேற்றனர் .