ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தற்கொலை முயற்சி

sen reporter
0

  மனநல பாதிக்கப்பட்ட மகனுக்கு சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காததால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் உயிரிழந்த தாயார், தந்தை மற்றும் மகன் கவலைக்கிடம்.



பாண்டிச்சேரி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (65), இவருடைய மனைவி கலைச்செல்வி (60), இவருக்கு மணிகண்டன் (27) என்ற மகனும் இரு மகள்கள் உள்ளனர்,


இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பாண்டிச்சேரியில் இருந்து சென்னை கீழ்கட்டளை உள்ள தனது இரண்டாவது மகளை காண செல்ல திருவான்மியூர் பணிமனையில் M1 பேருந்தில் மனைவி மற்றும் மகனுடன் அமர்ந்துள்ளார்,


பேருந்து சீட்டை பெற வந்த நடத்துனர் ஆறுமுகத்தின் சோர்வை கண்டு விசாரித்த போது தானும் தனது மனைவி மற்றும் மகன் என மூவரும் பூச்சி மருந்து உட்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்து பேருந்து நடத்துனர் உடனடியாக திருவான்மியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்,


பின்னர் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மூவரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருவான்மியூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்,


விசாரணையில் ஆறுமுகத்தின் 27 வயது மகனான மணிகண்டன் மனநல பாதிக்கப்பட்டவர் என்றும் பிறரை அடிப்பது உள்ளிட்ட சில செய்கைகளால் கணவன் மனைவி இருவரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் மன வேதனையில் இருந்து வந்ததாகவும்,


மணிகண்டனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் எதுவும் பலனளிக்கப்படாத நிலையில் பாண்டிச்சேரியில் திருமணம் செய்து கொடுத்த தனது மூத்த மகளை குடும்பத்துடன் பார்த்து அவருடன் தங்கி விட்டு தனது இரண்டாவது மகளை காண திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்ததுள்ளனர்,


அப்போது பாண்டிச்சேரியில் இருந்து வாங்கப்பட்ட பூச்சி மருந்தை திருவான்மியூர் பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாட்டிலில் கலந்து ஆறுமுகம் அவருடைய மனைவி கலைச்செல்வி இருவரும் அருந்துவிட்டு மகன் மணிகண்டனுக்கும் கொடுத்துள்ளனர்,


இந்நிலையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மூவரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கலைச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார், மேலும் ஆறுமுகம் மற்றும் அவருடைய மகன் மணிகண்டன் இருவரும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top