குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் பெண் ஒருவரை ஒரு தலைப்பட்சமாக. இளைஞர் ஒருவர் காதலித்துள்ளார் .
திடீரென்று ஒரு நாள் அந்த இளைஞர், பேராசிரியர் இடம் தன்னை திருமணம் செய்யக்கோரி கட்டாயப்படுத்தியதோடு கொலை முயற்சியிலும் ஈடுப்பட்டுள்ளார்.
இதனால் பயந்து போன பேராசிரியர் பணிக்கு வராமல் அச்சத்தில் உரைந்துள்ளார் .இந்த நிலையில் பேராசிரியர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் பேராசிரியரை மிரட்டிய அந்த இளைஞரை விசாரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட பெண் உயிர் பயத்தில் வீட்டில் இருப்பதாகவும்,அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும், கொலை மிரட்டல் விட்ட இளைஞரை கைது செய்ய வேண்டும் என. கேட்டு இந்திய கிளினிக் மருத்துவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட செயலாளர். டாக்டர். நலன் குமார் தலைமையில் ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.