தேனி மாவட்டம் உப்புக்கோட்டை அருகில் மாணிக்காபுரம் என்ற கிராமத்தில் உள்ள ஓடையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் தேனி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலை தொடர்ந்து விரைந்து வந்த தேனி உதவி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ.ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பாதை வசதிகள் ஏதும் இல்லாததால் சிரமப்பட்டு நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.