திருவொற்றியூர் காவல்துறை குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி புவனேஸ்வரி. ஜீப்பில் ரவுண்ட்ஸ் வந்து கொண்டிருந்த போது டோல்கேட் பகுதியில் ஆம்புலன்ஸ் வர தாமதமாகி அவதிப்பட்டுக் கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணி கலைவாணி (வயது 21)யைக் கண்டார்.
உடன் தாமதிக்காமல் காவல்துறை ஜீப்பில் அவரை ஏற்றிச் சென்று ராயபுரம் ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்தார். கருணையோடு செயல்பட்ட ஆய்வாளர் புவனேஸ்வரி அவர்களை மனதார பாராட்டுவோம்.