புதுவை கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் ஊர்க்காவல் படை அணிவகுப்பு நடந்தது. ஊர்காவல் படை கண்காணிப்பாளர் சரவணன் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். ஊர்க்காவல் படை வீரர்கள் பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்.
போக்குவரத்து துறை சார்பில் பேசிய புதுமை பாலகிருஷ்ணன் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிர் மற்றும் பொருள் இழப்பு பற்றி பேசினார். உதவி ஆய்வாளர்கள் பாபு, சந்திரசேகரன் அணிவகுப்பை ஏற்பாடு செய்தனர். புதுவை ஊர்காவல் படை வீரர்கள் அணிவகுப்பில் கலந்து கொண்டனர்.