நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நடந்தாய் வாழி காவிரி என்ற திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு பெற்றதும் குமாரபாளையத்தில் ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என கலெக்டர் உமா தெரிவித்தார்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள சலவை மற்றும் சாயப்பட்டறை தொழிற்சாலைகளில் பூஜ்ஜிய கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இயக்கம் குறித்த விளக்க கூட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார் பின்னர் அவர் பேசியதாவது
காவிரி ஆற்றில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதாக புகார்கள் எழுந்தன இதன் அடிப்படையில் பல்வேறு சாயப்பட்டறைகளில் ஆய்வு செய்யப்பட்டது சாயப்பட்டறை மற்றும் சலவைத் தொழில் நலிவடையாமலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பொதுமக்களின் சுகாதாரம் பாதிப்படையாமல் இருக்க பூஜ்ஜியம் கழிவுநீர் சுத்திகரிப்பு முறை இயக்கத்தை நடைமுறைப்படுத்துவது அவசியம் குமாரபாளையம் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் 122 சலவை மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன நடந்தாய் வாழி காவேரி என்ற திட்டத்தின் கீழ் ரூ 303 கோடி. மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து தமிழ்நாடு அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசு அதனை பரிசீலனை செய்து நிதி அளிக்க மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நிதி பெற்றவுடன் பள்ளக்கா பாளையம் எழுந்தக்கோட்டை மற்றும் சௌதாபுரம் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் பொது சுத்தகரிப்பு மையம் அமைக்கப்படும் ஒருங்கிணைந்த பொது சுத்திகரிப்பு மையம் அமைப்பதன் மூலம் சலவை மற்றும் சாயப்பட்டறைகளில் கழிவு நீர் அற்ற சுத்திகரிப்பு முறை உறுதி செய்யப்படும் இவ்வாறு அவர் பேசினார் .
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குமாரபாளையம் சுற்றுச்சூழல் பொறியாளர் மணிவண்ணன் சுற்றுச்சூழல் பொறியாளர் பறக்கும் படை வனஜா நகராட்சி ஆணையாளர்கள் தாமரை கிருஷ்ணன் ராஜேந்திரன் உட்பட அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் சலவை தொழில் சாலை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்