தேனி அரண்மனைப்புதூரில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்துள்ளதாக தேனி தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தகவலை தொடர்ந்து விரைந்து வந்த தேனி உதவி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெ.ஜெயராணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் வீட்டிற்குள் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர்.
பின்பு பிடிபட்ட பாம்பை தீயணைப்பு துறையினர் அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.உடன் தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து து.நாகராஜ் உடனிருந்தார். குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு வந்ததால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். மேலும், விரைந்து செயல்பட்டு பாம்பை பிடித்த தேனி தீயணைப்பு துறையினரை பொதுமக்கள் பராட்டிய வண்ணம் உள்ளனர்.