திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பஉச நகர் பகுதியில் உள்ள திருப்பத்தூர் நகர பாஜக அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம் கலந்து கொண்டு பேட்டி அளிக்கையில்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்று இருக்கிறார் பெங்களூருவில் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுக் கொண்டு அவர் தமிழகம் திரும்ப வேண்டும். கர்நாடகாவில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதென்றால் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் அப்போதுதான் கலந்து கொள்வேன் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நிபந்தனை விதித்திருக்க வேண்டும். அவ்வாறு எந்த வித நிபந்தனையும் விதிக்காமல் கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு பங்கேற்கும் எதிர்க்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பெங்களூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாதுவில் காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை கைவிடுவதாக அறிவிப்பு வெளியிடும்படி கர்நாடகா காங்கிரஸ் அரசை வலியுறுத்த வேண்டும் உடனடியாக தமிழகத்திற்கு சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்து விடும்படி கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்த வேண்டும் இவற்றை செய்யாமல் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் மட்டும் கலந்து கொண்டு அவர் தமிழகம் திரும்பினால் அது தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் செய்யக்கூடிய மிகப்பெரிய துரோகமாக இருக்கும்.
திமுகவைப் பொறுத்தவரை அந்த கட்சிக்கு மக்கள் நலனிலோ விவசாயிகள் நலனிலோ அக்கறை கிடையாது தங்களுடைய சொந்த நலனுக்காக தமிழகத்தின் நலனை காவு கொடுப்பவர்கள் திமுகவினர் அதேபோன்று வரலாறு மீண்டும் திரும்பக் கூடாது எனவே முதலமைச்ச ஸ்டாலின் கர்நாடகாவில் இருந்து திரும்பி வரும்போது கர்நாடக காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை கைவிட்டு விட்டது என்ற அறிவிப்பை பெற்று திரும்ப வேண்டும் அப்போதுதான் அவர் தமிழக மக்கள் நலனில் அக்கறை உள்ளவர் என்பது நிரூபணம் ஆகும்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. இந்த சூழலில் அவர்கள் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை துரிதப்படுத்த இருக்கிறார்கள் எனவே தமிழக முதலமைச்சர் தற்போது பெங்களூர் சென்று உள்ள நிலையில் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசிடம் பேசி அந்த திட்டத்தை கைவிடும் படி வலியுறுத்த வேண்டும் என பேசினார். அப்போது உடன் மாவட்ட தலைவர் வாசுதேவன், மாவட்ட செயலாளர் கண்மணி, மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன், நகர தலைவர் சண்முகம் மற்றும் பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்...