தேனி மாவட்ட நாடார் சங்கம் சார்பாக வருகின்ற ஜூலை 15ஆம் தேதி அன்று பெருந்தலைவர் .காமராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி மாவட்டம் முழுவதும் அரசு பொது விடுமுறை அளிக்க வேண்டும் எனவும்
,அன்றைய நாளில் அரசு, தனியார் மதுபான கடைகளை மூட வேண்டியும், அரசு அலுவலகங்களில் பெருந்தலைவர் காமராஜ் அவரின் விழா நடத்தவேண்டியும், மேலும்,அன்றைய தினத்தில் கள்ளச் சந்தையில் மது விற்போர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க சென்றனர்.
இதனை தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் சென்னை சென்றுள்ள காரணத்தினால் அவரின் நேர்முக உதவியாளரான சிந்து அவரிடம் மனு அளித்தனர்.