டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள Z.K.M மேல்நிலைப்பள்ளியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் ர.குமரேசன் தலைமையில் ஆசிரியர் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தீதடுப்பு விழிப்புணர்வும் அதனை தொடர்ந்து ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது.
இந்த ஒத்திகை பயிற்சி யானது போடிநாயக்கனூர் வட்டாட்சியர், மற்றும் நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி சங்கர் முன்னிலையிலும் நடத்தப்பட்டது. போடிநாயக்கனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் க.பழனி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இந்த ஒத்திகை பயிற்சியை செய்து காட்டினர்.