தேனி மாவட்டம் அல்லிநகரம் நிலைய உதவி மாவட்ட அலுவலர் ஜெ.ஜெயராணி, மற்றும் நிலைய அலுவலர் போக்குவரத்து து.நாகராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் NS கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தினர்.
அதனை தொடர்ந்து போலி ஒத்திகை பயிற்சியும் அளித்தனர்.இந்த நிகழ்ச்சியில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியானது மாணவிகளை வெகுவாக கவர்ந்தது மட்டுமின்றி, விழிப்புணர்வு ஏற்படுத்திய தீயணைப்பு துறையினரை கல்லூரி நிர்வாகம் பாராட்டிய வண்ணம் உள்ளனர்.