நீலகிரி மாவட்டம் சின்ன சூண்டி காந்திநகர் பகுதியில் நேற்று மரம் விழுந்ததில் மின்சாரம் தூண் சாய்ந்து மின்சாரம் துண்டிப்பு.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுண்டி காந்திநகர் பகுதியில் மின்சாரம் இல்லாமல் பல மணி நேரம் பொதுமக்கள் அவதி .
மின்சார வாரியம் முறையாக பராமரிப்பு பணிகளை செய்திடவில்லை என்றும் இதனால் தான் மின் கம்பம் சாய்ந்து மின்தடை ஏற்பட்டது என்றும்.இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
.மேலும் இது குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில் மின்சார வாரியம் பராமரிப்பு பணியினை முறையாக கண்காணித்து பராமரிப்பு பணிகளை செய்திட வேண்டும் மின்தடைக்கு காரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க தமிழக முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
நீலகிரி மாவட்ட செய்தியாளர்
Dr
G.ரஜினிகாந்த்