தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து திருப்பூர் செல்லும் N-2352 எண் கொண்ட அரசுப் பேருந்தில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், ஆபத்தான நிலையில் உள்ளதாலும் பேருந்து பயணிகள் அச்சஉணர்வுடன் பயணிக்கின்றனர்.
அரசு போக்குவரத்து ஊழியர்கள் இதைப் பொருட்படுத்தாமல் மக்களின் உயிரோடு விளையாடுவதாக பயணிகள் புலம்புகின்றனர்.
பெரும்பாலான அரசுப் பேருந்துகள் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருப்பதை டிப்போ மேற்பார்வையாளர் கண்டுகொள்ளாமல் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டு. போக்குவரத்துதுறை அமைச்சர் நேரடி பார்வையில் பின்தங்கிய தேனி மாவட்டத்தில் அரசுப் பேருந்துகளை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.