மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று தலைமைச் செயலகத்தில், திருமதி சரஸ்வதி செல்வராஜ், திருமதி மரகதம் மாரிமுத்து, திருமதி மொபினா, திருமதி செல்லம்மாள் ஆகியோர் சந்தித்து, பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாக்களில், கிராமக் கணக்குகளில் உரிய
திருத்தங்கள் மேற்கொண்டு திருத்தப்பட்ட பட்டாக்களை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்துக் கொண்டனர். உடன் மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன் அவர்கள் உள்ளார்.
