தேனி மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு செய்த மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர்!!!
10/25/2023
0
வீரபாண்டியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டார்.அதனை தொடர்ந்து கம்பம் நடராஜ் திருமண மண்டபத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மகளிர் சுயஉதவிக்குழு அங்காடியினை திறந்து வைத்தும்,என்.ஆர்.டி பகுதியில் நூலகத்தையும் திறந்து வைத்தார். மேலும் தேனி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ததுடன் நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். மேலும், இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணகுமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மாகாராஜன் மற்றும் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்செல்வன் உட்பட ஏராளமான கட்சி தொண்டர்களும், பல்வேறு அரசுதுறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
