தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நங்கநல்லூர் நல சங்கத்தினர்!!!
10/25/2023
0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் நங்கநல்லூர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் திரு. குமாரவேலு, துணைச் செயலாளர் திரு. இன்பசேகரன், ஆலோசகர் திரு. இராமாராவ், ஆதம்பாக்கம் நல சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் திரு. அகஸ்டின் டேவிட்,TNGO காலனி நலச்சங்கத்தின் செயலாளர் திருமதி. தமிழ்செல்வி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பத்து மற்றும் பத்திற்கு குறைவாக உள்ள வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் புது பயன்பாட்டு மின் மீட்டர் கட்டணத்தை குறைத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொண்டார்.உடன் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன் அவர்கள் உள்ளார்.
.jpg)