வீரபாண்டி அரசு கல்லூரியில் படிக்கும் மாணவரின் உடலை தீயணைப்பு துறையினர் இரண்டாம் நாளாக தேடி வருகின்றனர். வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் படிக்கும் பெரியகுளம் தாமரைகுளத்தை சேர்ந்த மாணவர் தனது நண்பர்களுடன் நேற்று வீரபாண்டி முல்லைப் பெரியாற்றில் குளிப்பதற்காக சென்றார். அதனை தொடர்ந்து மாணவர் ஆற்றில் தவறி விழுந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை தொடர்ந்து விரைந்து வந்த உதவி மாவட்ட
தீயணைப்பு அலுவலர் குமரேசன் மற்றும் ஜெ.ஜெயராணி தலைமையிலான தீயணைப்புதுறை கமாண்டோ பணியாளர்கள் மாணவரின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும்,நீண்டநேரமாக தேடியும் மாணவரின் உடல் கிடைக்காததை தொடர்ந்து இன்று இரண்டாம் நாளாக மாணவரின் உடலை தேடும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த தேடுதல் பணியில் நிலைய அலுவலர் போக்குவரத்து நாகராஜன் மற்றும் பாண்டியராஜன் உடன் உள்ளனர்.

