சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஈஞ்சாம்பாக்கம் 194வது வார்டு கணேஷ் நகரில் சாலைகளை சீரமைக்க கவுன்சிலர் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.தற்போது மழை பெய்து வரும் சூழ்நிலையில் 194வது வார்டு கணேஷ் நகரில் சாலைகள் எங்கும் மழைநீர் தேங்கி காணப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பகுதி மக்கள் சாலைகளில் செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டது. மேலும், வாகன ஒட்டிகள் இப்பகுதியில் செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்து வந்தனர். தொடர்ந்து, இப்பகுதி மக்கள் தங்களுக்கு விடிவு காலம் வராதா என புலம்பியவாரும் இருந்தனர்.அவசர சூழ்நிலையில் அவசர ஊர்திகள் வந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது.
இதனைதொடர்ந்து இப்பகுதி மக்கள் கவுன்சிலர் விமலா கர்ணா அவர்களிடம் புகார் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை எற்றுக்கொண்ட கவுன்சிலர் விமலா கர்ணன் உடனே மழைநீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை உற்சாகத்துக்கு கொண்டு சென்றதுடன் துரித நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் விமலா கர்ணனை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
.jpg)