மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை தேவை!!
சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோரிக்கை....
நிறைவேறுமா??
நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சியில் சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் தினந்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் நகராட்சியில் அமைந்துள்ள இறைச்சிக் கடைகளால் வெட்டப்பட்ட இறைச்சி கழிவுகள் தினந்தோறும் நடை பாதையில் வைக்கப்படுவதால் அப்பகுதி முழுதும் ரத்தக்கறையும், ரத்த வாடையும் வெளியேறுகிறது.
மொத்தத்தில் ரத்தப்பாதையாக காணப்படும் உதகை நகராட்சி சந்தை அருகே அமைந்துள்ள நடைபாதையை சுமார்
5000ற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த நடைபாதையை கடந்து செல்லும்போது துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்படும் அபாயத்தில் பாதசாரிகள் பயணிக்கின்றனர்.
இறைச்சிகளின் கழிவுகள் தினம் தோறும் அந்த இடத்தில் வைக்கப்படுவதால் அந்த இடத்தை தினம்தோறும் நன்றாக கழுவி சுத்தம் செய்து கிருமிநாசினி தெளித்து, சுத்தம் செய்யப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இது போன்ற அப்பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் Dr G.ரஜினிகாந்த் தலைவர் நெல்லியாளம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை வைத்துள்ளனர்.

