சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்கள் ஆணையின்படியும், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் அவர்கள் ஆலோசனைப்படியும்,மேலும், 15வதுமண்டலகுழு தலைவர் எ.மதியழகன் அவர்களின் அறிவுறுத்தலின்படியும்,194வது வட்டம் கற்பக விநாயகர் நகரில்
19.11.2023,இன்று மாலை 6மணியளவில் மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.இந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் கவுன்சிலர் விமலா கர்ணா கலந்து கொண்டு மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.மேலும், மக்களின் குறைகளை விரைவில் நிவர்த்தி செய்து தருவேன் என கூறினார். மேலும், இந்த நிகழ்வில் பொறியாளர் துறை, சுகாதாரத்துறை, மெட்ரோ குடிநீர் துறை, தெருவிளக்கு துறை மற்றும் இவர்களுடன் மாநகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

