நெடுங்குளத்தில் கால்நடை மருத்துவ முகாம்!
கோவில்பட்டி கோட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், நெடுங்குளம் கிராமத்தில் சிறப்பு காடை மருத்துவ மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தூத்துக்குடி.மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநரின் அறிவுரையின் பேரில் கோவில்பட்டி கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் விஜயாஸ்ரீ தலைமையில் ஊராட்சி மன்ற தலைவரால் முகாம் துவக்கி வைக்கப்பட்டது.
நடந்த கால்நடை முகாமில் 340 சிகிச்சை, 1040 குடற்புழுநீக்கம், செயற்கைமுறை கருவூட்டல், 12 சினை பரிசோதனைகள்,
மலடு நீக்கச் சிகிச்சை,
தாது உப்புக்கலவை வழங்குதல் மற்றும் 350 தடுப்பூசி பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன.
(மாடுகளும்கான காணை நோய்த்தடுப்பூசி உட்பட).
கிடேரிக்கன்றுகளைச் சிறப்பாக வளர்த்துப் பராமரிப்பவர்களுக்குப் பரிசுப்பொருட்களும், சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு கால்நடை பராமரிப்பிற்கான மேலாண்மை விருதுகளும் வழங்கப்பட்டன.முகாமில் சுமார் 2000ற்கும் மேற்பட்ட கால்நடைகள் பயனடைந்தன.
இம் முகாமில் சூரங்குடி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவர்(கூடுதல் பொறுப்பு),
கால்நடை ஆய்வாளர் ஷோபனா, செயற்கைமுறை கருவூட்டாளர் குருநாத பாண்டியன்,கால்நடை பராமரிப்பு உதவியாளர் சுடலைமுத்து, நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவி ஜெயலட்சுமி, சமூக ஆர்வலர்கள் மயில்ராஜா, ஆறுமுகவேல், மற்றும்
கிராம பொதுமக்கள், கால்நடை வளர்ப்போர் கலந்துகொண்டனர்.
.jpg)