வேலூர்: ஸ்ரீபுரத்தில் ஸ்ரீ நாராயணி பீடம் அமைந்துள்ளது. இங்கு 108 அடி உயரம் கொண்ட ராமர் உருவத்தால்!!
1/22/2024
0
ஆன கட்-அவுட் வைக்கப்பட்டது. கட்-அவுட்டை சுற்றிலும் எல். இ. டி. விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது அந்த கட்-அவுட் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த கட்-அவுட்டை மிகவும் நேர்த்தியாக தயார்படுத்தி இருந்தனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். இந்நிலையில் ஸ்ரீபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த இந்த கட்-அவுட் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்-அவுட் சுமார் 2 லட்சம் எல்.இ.டி. வண்ண விளக்குகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்ரீநாராயணி பீடாதிபதி ஸ்ரீ சக்தி அம்மா தனது திருகரங்களால் இணங்கச் செய்து தொடங்கி வைத்தார். அந்த வண்ண விளக்குகளில் ராமர் ஜொலிக்க ஆரம்பித்தார். இதை பக்தர்கள் பக்தியுடன் பார்த்து தரிசனம் செய்தனர். இந்த கண்கொள்ளாக் கட்சியை பலர் பார்த்து ரசித்துச் சென்றனர். அதாவது உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வந்த பக்தர்கள் பலர் தரிசனம் செய்து வழிபட்டனர். இதை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ஸ்ரீபுரத்துக்கு வருகை தந்து தரிசித்து விட்டுச் செல்லலாம் என்று ஸ்ரீநாராயணி பீட நிர்வாகம் அறிவித்துள்ளது.
.jpg)