விளாத்திகுளம் அருகே வேம்பாரில் சிறுவன்அஸ்வின் குமார் குடும்பத்தினரை மார்கண்டேயன் எம்எஎல்ஏ நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 10 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரில் 7 வயது சிறுவன் அஸ்வின் குமார் கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாரை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் நேரில் சந்தித்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார்.
இந்நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர்கள் பெப்பின் காகு, மரிய சிங்கம், விவசாய அணி துணை அமைப்பாளர் ராம சுப்பிரமணியன், மகளிர் அணி துணை அமைப்பாளர் எப்ரோமீனா மேரி, சடையாண்டி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
