தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் சென் மீடியா நெட்ஒர்க் செய்தியின் எதிரொலியால் சீராகிறது சாக்கடை பிரச்சனை.
தேனி மாவட்டம் கம்பம் நகரில் காந்தி சிலை முன்பு பல நாட்களாக சாக்கடை நீர் கால்வாய் தேங்கி சாலையில் ஓடும் அவல நிலை ஏற்பட்டது.
இதனால் வாகன ஒட்டிகளும், பாதசாரிகளும் பெரும் அவதி அடைந்து வந்தனர். மேலும்,இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் கம்பம் நகராட்சி நிர்வாகத்திடம் நடவடிக்கை எடுக்கக்கோரி கோரிக்கை வைத்து வந்தனர்.
நேற்று பொதுமக்களின் அவலம், மற்றும் பாதுகாப்பற்ற சூழலை நமது சென் நியூஸ் செய்தியில் வெளியிட்டதை தொடர்ந்து தற்போது கம்பம் நகராட்சியில் தேங்கிய சாக்கடை நீர் சாலையில் ஓடுவதை அகற்றி நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் கம்பம் நகர் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்,நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்தினரை பாராட்டினர்

