வேலூர் மாவட்டம்: கீழ் அரசம்பட்டு கிராமத்தில் மாடு விடும் விழா கோலாகலமாக நடந்தது. இரண்டு இடங்களிலும் தலா நூற்றுக்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடின!!
1/21/2024
0
மாடு விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்தனர். ஒவ்வொரு கிராமத்திலும் மாடு விடும் விழா நடத்த மாவட்ட நிர்வாகம் விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் ஒன்று மனித உயிருக்கோ அல்லது முழு ஊனத்திற்கு இழப்பீடு வழங்கும் வகையில் விழா குழுவினர் காப்பீடு செய்திருக்க வேண்டும். அப்படி காப்பீடு செய்திருந்தால் மட்டுமே விழா நடத்த அனுமதிக்கப்படும் என்ற விதி உள்ள நிலையில் தற்போது நடைபெற்ற கீழ் அரசம்பட்டு மற்றும் கோவிந்த ரெட்டிபாளையம் ஆகிய இரண்டு இடங்களில் காப்பீடு செய்யாததால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அனுமதியை மீறி மாடு விடும் விழா நடைபெற்றது. இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
