தேனி மாவட்டம்: இராயப்பன்பட்டி: இராயப்பன்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம்! புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வும் நடந்தது!!

sen reporter
0


 தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இராயப்பன்பட்டி ஊராட்சியில் இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


இந்த கிராமசபை கூட்டமானது ஊராட்சிமன்ற தலைவர்  Gஆரோக்கியசாமி என்ற பால்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பொதுமக்களின் கேள்விகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் விளக்கம் கொடுத்தார். மேலும் இதனை தொடர்ந்து 2022-2023க்கான 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் சுகாதார பொதுக்கழிப்பிடம் கட்டுவதற்கு ஊராட்சிமன்ற தலைவர் அடிக்கல் நாட்டினார்.


இந்த நிகழ்வில் அரசு அலுவலர்கள், வார்டு, உறுப்பினர்கள் உட்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top