தேனி மாவட்டம் ஆனைமலையான்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் கிராமசபை கூட்டமானது ஊராட்சிமன்ற தலைவர் மு.மீனா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்தனர். மேலும், இந்த நிகழ்வில் ஊர் மக்களின் சார்பாக ஆனைமலையான்பட்டி ஊராட்சி டாக்டர் அம்பேத்கர் காலனி திமுக கிளை செயலாளர் க.மணிவண்ணன் அவர்கள் கோரிக்கை மனுவினை ஊராட்சி மன்ற தலைவரிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் கவிதா, வார்டு உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
.jpg)