வேலூர் மாவட்டம்: குடியாத்தம் தாலுகா: பார்வதியாபுரம் அருகே அம்மன் கோயில் உண்டியல் உடைப்பு!? போலீசார் தீவிர விசாரணை! மாரியம்மன் கோயில் அருகே மதுக்கடை, மக்கள் வேதனை!?

sen reporter
0


 வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கூட நகரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பார்வதியாபுரம் செல்லும் வழியில் சுமார் 20 ஆண்டுகளாக ஸ்ரீமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.


அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தினந்தோறும் 

ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் கடந்த 21ம் தேதி திங்கட்கிழமை அன்று இரவு மர்ம நபர்கள் மாரியம்மன் கோயில் உண்டியல் பூட்டை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். 


இது குறித்து அங்குள்ள மக்கள் ஊர் பெரியவர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஊர் பெரியவர்கள் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 


தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர்  சீனிவாசன் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்று கோயில் உண்டியலை உடைத்த மர்ம நபர் யார்?என்று புலன் விசாரணை நடத்தினார்.


போலீசார் தீவிரமாக உண்டியலை 

உடைத்தவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். 

இந்த துணிகர திருட்டுக்கு காரணமே கோயில் அருகாமையில் டாஸ்மாக்  மது கடை உள்ளது என்கின்றனர் மக்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top