தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி அனைத்து மாவட்டங்களிலுள்ள பொதுமக்களுக்கும் பொங்கல் தொகுப்பானது கடந்த சில நாட்களுக்கு முன்னாள் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக ரேஷன் கார்டுடைய ஒரு சில குடும்ப அட்டைதாரர்கள் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் இயலாத நிலையில் இருந்துள்ளனர்.
இதுசம்பந்தமாக ரேஷன் கடைகளில் சென்று கேட்கும்போது நடக்கமுடியாமல்,வீட்டில் உள்ள ரேஷன் கார்டுடைய நபர்களுக்கு நேரில் சென்று பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து பொங்கல் விடுமுறை முடிந்தும் இதுவரை நோய்வாய்ப்பட்டு வீட்டில் இருக்கும் ரேஷன் கார்டுடைய நபர்களுக்கு,ரேஷன் கடை பணியாளர்கள் நேரில் சென்று பொங்கல் தொகுப்பு வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்ததுடன் இதுகுறித்து உறவினர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று கேட்டதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு முடிந்துவிட்டது என அலட்சியமாக ரேஷன் கடை ஊழியர்கள் பதில் அளித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது பொங்கல் தொகுப்பு வாங்காத கார்டுதாரர்கள் மனு எழுதி தபால் கவரில் வைத்து வட்ட வழங்கல் அலுவலரிடம் வழங்குமாறு தகவல் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
நாங்கள் படிக்காத பாமர மக்கள் மனு எழுதி யாரை சந்திப்பது என்று பொதுமக்களின் புலம்பல்கள் திடீரென ஒலிக்கும் குரல் ஆங்காங்கே கேட்கிறது. பொங்கல் தொகுப்பு வாங்காத கார்டுதாரர்களின் பணம் என்ன ஆனது?
அரசுக்கும் தமிழக முதல்வருக்கும், கூட்டுறவுத்துறை அமைச்சருக்கும் இந்த நிகழ்வுகள் தெரியுமா? என பொதுமக்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.தமிழக மக்களின் இந்த புலம்பல்களுக்கும், கோரிக்கைகளுக்கும் மாண்புமிகு கூட்டுறவுதுறை அமைச்சர் இ.பெரியசாமி அவர்கள் நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைப்பாரா?பொறுத்திருந்து பார்ப்போம்.

