தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் கோகிலாபுரம் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கவலைகளுக்கு தீர்வு கொடுப்பாரா???
1/19/2024
0
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட கோகிலாபுரத்தில் நூலகம் செயல்படாமல் உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் நூலக வாசிப்பார்களும் அவதி அடைந்து வருகின்றனர். கோகிலாபுரத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளதை தொடர்ந்து இப்பகுதியில் நூலகம் இருந்தும் பல மாதங்களாக செயல்படாமல் உள்ளதால் நூலக வாசிப்போர்கள் மன உளைச்சல் அடைந்து வருகின்றனர். கோகிலாபுரத்தில் பெரும்பாலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அரசு தேர்வை எதிர்நோக்கி மாலை நேரங்களில் நூலகதிற்கு சென்று வந்தனர். தற்போது பல மாதங்களாகியும் நூலகம் செயல்படாமல் உள்ளதால் அப்பகுதி மாணவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுகுறித்து பலமுறை தேனி மாவட்ட நூலக அலுவலருக்கு தெரியப்படுத்தியும் கண்டும், காணாமலும் உள்ளதாக இப்பகுதி நூலக வாசிப்போர்கள் புலம்புகின்றனர்.மேலும், இது மாணவர்களின் எதிர்கால கனவை தேனி மாவட்ட நூலக அலுவலர் சீர்குலைப்பதாக இப்பகுதியில் பரவலாக பேசுகின்றனர். கோகிலாபுரத்தில் நூலக நிலையத்தை செயல்படுத்தவேண்டி தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியில் குரல் எழுந்துள்ளது. கோகிலாபுரம் பொதுமக்களின் குரல்களுக்கு தேனி ஆட்சித்தலைவர் தீர்வு கொடுப்பாரா பொறுத்திருந்து பார்ப்போம்..
