வேலூர் மாவட்டம்: கரிகிரி கிராமத்தில் ஏரி மண் தொடர்ந்து திருடப்படுகிறது. கைகட்டி வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்: கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?
1/18/2024
0
காட்பாடி அடுத்த கரிகிரி கிராமத்தில் ஏரி மண் தொடர்ந்து திருடப்படுகிறது. அப்பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக சரவணன் பணியாற்றி வருகின்றார். அப்பகுதியில் கடந்த மூன்று தினங்களாக அதாவது சக்கராகுட்டை ஏரியில் இருந்து ஏரி மண்ணை சட்டத்துக்கு புறம்பாக திருட்டுத்தனமாக எடுப்பதாக புகார்கள் வந்த நிலையில் இருந்தது. கிராம நிர்வாக அலுவலர் கண்டும் காணாமல் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இவர் பணி செய்யும் இடமெல்லாம் ஏரி மண், ஆற்று மணல் எடுக்கும் இடத்திற்கு அருகிலேயே பணியமர்த்தப்படுகிறார். இவர் அலுவலகத்தில் புரோக்கர்கள் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. புரோக்கர்கள் சொன்னால்தான் அணுவும் அசையும். அதாவது எந்த வேலையும் நடக்கின்றது. இல்லையென்றால் அந்தப் பணிகள் நடப்பதில்லை. கிடப்பில் போட்டு விடுகிறார் இந்த புண்ணியவான். இவ்வாறு பொதுமக்கள் தரப்பில் கூறப்படும் ஒட்டுமொத்த குற்றச்சாட்டாக உள்ளது. இருப்பினும் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனிடம் தகவலை தெரிவித்தார் நிருபர். இதற்கு பதிலளித்த வட்டாட்சியர், நான் உடனடியாக கிராம நிர்வாக அலுவலரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்துகிறேன் என்றார். இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சரவணனை தொடர்பு கொண்டு அந்த பகுதியில் என்ன நடக்கிறது என்று கேட்க, பதிலளித்த விஏஓ சரவணன் நான் அந்த பகுதியில் கள ஆய்வு செய்கிறேன் என்று கூறினார். இருப்பினும் காவல் துறையை வரவழைத்து அந்த மண்ணெடுக்கும் பகுதிக்கு நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் சரவணனுக்கு வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் அறிவுறுத்தினார். கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கூறுகையில், அமைச்சர் பெயரை பயன்படுத்தி மண் எடுப்பதாக கூறினார்கள். பிறகு கேட்டபோது அனுமதி பெற்று எடுக்கிறார்கள் என்று கிராம நிர்வாக அலுவலர் சரவணன் கூறுகிறார். ஆனால் இதில் எது உண்மை என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் விஏஓ சரவணன் பல்வேறு விரும்பத்தகாத தகவல்களை தனது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு தனது தவறுகளை மறைப்பதாக கரிகிரி கிராம பொதுமக்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் கூறப்படுகிறது. ஆதலால் மாவட்ட நிர்வாகம் இந்த கிராம நிர்வாக அலுவலர் மீது உரிய துறை ரீதியான விசாரணை நடத்தி அது உண்மை என தெரியவரும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பது கரிகிரி கிராம மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
