ஜனவரி 3ம் தேதி தொடங்கிய சென்னை புத்தக கண்காட்சி நிறைவு பெற்றது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் 47வது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3ம் தேதி கோலாகலாமாக தொடங்கியது.
இம்முறை புத்தக கண்காட்சியில் மொத்தம் 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்த நிலையில்,
18 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன.
இந்த புத்தக காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 900 அரங்குகளில் ஏராளமான தனித்துவமான புத்தகங்கள் இடம்பெற்றிருந்தன.
விடுமுறை நாட்களில் காலை 11 முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த ஆண்டு மொத்தம் 19 நாட்கள் சென்னை புத்தக காட்சி நடைபெற்றது. 15 லட்சம் வாசகர்கள் வருகை தந்திருந்தனர்.
சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன. வருகை தந்தவர்களில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
