திருவண்ணாமலை செங்கம் நகர் பகுதியில் இயங்கும் லாரி உரிமையாளர்கள் சங்கம் துவக்க விழா மற்றும் அலுவலக திறப்பு விழாவில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி தலைமையேற்று குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்தினார்.
மேலும் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய மோட்டார் போக்குவரத்து தலைவர் குருஜி சண்முகப்பா மற்றும்
லாரி உரிமையாளர் சங்க மாநிலத் தலைவர் தன்ராஜ் மற்றும் சென்னை மாநகராட்சி தலைவர் யுவராஜ் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் பாபு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள்
பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்
மேலும் அரசு விதிமுறைகளை கடைப்பிடித்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றக் கூடாது எனவும் சுழற்சி முறையில் வாடகைக்கு அனுப்பப்படும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்வில் செங்கம் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பாலதண்டாயுதம் செயலாளர் சேட்டு, பொருளாளர் தங்கராஜ் துணை தலைவர் இம்ரான் கான் துணை செயலாளர் ஆனந்தராஜ் தனிக்கையாளர் பிரபாகரன் மற்றும் செங்கம் நகர் லாரி உரிமையாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


