காஞ்சிபுரம் அடுத்துள்ளது வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம். இந்த ஒன்றியத்திற்கு உட்பட்டது அழிஞ்சல்பட்டு ஊராட்சி. இதில் செல்லபபெரும்புலி மேடு கிராமும் உள்ளடக்கியது.
செல்லப்பெரும்புலி மேடு கிராமத்தை சேர்ந்தவர்கள் சந்துரு - சேகர். இவர்கள் இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரையும் அழிஞ்சல்பட்டு ஊராட்சி மக்கள் 'எஸ்.எஸ்., பிரதர்ஸ்' என, அழைக்கப்பட்டு வருகின்றனர்.
செய்யார் சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் சிறு தொழிலை செய்து வரும் இவர்கள் ஊராட்சியில் ஏழை இளைஞர்களுக்கு வேலையும் வழங்கி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் பொது நலனில் அக்கறை உடையவராக இருந்து வருகின்றனர். நாட்டிற்காக தங்களை அர்பனித்துக் கொண்ட தேசத் தலைவர்களின் பிறந்த நாளை இவர்கள் சார்பில் கொண்டாடி வருகின்றனர். இதுதவிர, எஸ்.எஸ்., பிரதர்ஸ் தங்களது ஊராட்சியில் கோவில் திருவிழா, பொது நிகழ்ச்சிகளை தானாகவே முன்வந்து நடத்தி கொடுக்கின்றனர். இதனால், பொது மக்களிடம் நல்மதிப்பை பெற்று வருகின்றனர்.
பொங்கல் விழாவை ஒட்டி அழிஞ்சல்பட்டு, செல்லப் பெரும்புலி மேடு கிராமங்களில் கயிறு இழுத்தல், கபடி, நாற்காலில் அமருவது, ஓட்டப் பந்தையம், உறி அடித்தல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
வெற்றி வாலிபர்கள், இளம் பெண்கள் என, அனைவருக்கும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

