இராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்! இராமேஸ்வரத்தை சார்ந்த 21 மீனவர்கள் கைது!?

sen reporter
0


 இலங்கை நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த இராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக  இலங்கை கடற்படையினர்  கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 விசாரணைக்கு பின்னர் இரண்டு படகுகளையும் அதிலிருந்து 21 மீனவர்களையும் மயிலட்டி மீன்பிடி துறைமுகத்தில் வைத்து யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.



சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகள் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றது என தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top