வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 68 சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் வழங்கும் விழா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு ஒன்றிய குழு பெருந்தலைவர் ஜே. சித்ரா ஜனார்தனன் தலைமை தாங்கி சமையல் உபகரணங்களை வழங்கினார். இந்த விழாவில் ஆத்மா திட்ட தலைவர் புகலூர் கே. ஜனார்த்தனன், மேலாளர் ராஜபத்ரி, ஒன்றிய குழு துணை பெருந் தலைவர் டி. லலிதா டேவிட் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேரணாம்பட்டு சத்துணவு மையங்களுக்கு சமையல் உபகரணங்கள் வழங்கும் விழா!
3/16/2024
0
.jpg)