தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள இனாம் கல்லூரணி கிராமத்திற்குபள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்வோர் என அனைவரும் சிரமப்பட்டு வருவதால் உடனடியாக பேருந்து சேவையை இயக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய பாஜக தலைவர் பார்த்திபன் மற்றும் பொதுச்செயலாளர் சுயம்பு தலைமையில் பாஜகவினர் மற்றும் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி 29-ம் தேதி வைப்பார் நிறுத்தத்தின் அருகில் ECR சாலையில் சாலை மறியலில் ஈடுபட போவதாக வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த 26.02.2024 விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையில் பாஜகவினர் மற்றும் இனாம் கல்லூரணி கிராம மக்களிடம் சாலை மறியல் போராட்டத்தை கைவிடக் கோரி சமாதானப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து இன்று கிராமத்திற்கு பஸ் இயக்கப்பட்டது. மகிழ்ச்சியில் மக்கள் பாஜகவினருக்கு நன்றி தெரிவித்து கொண்டாடினர்.
