அவர்களை விடுதலை செய்ய அப்பகுதி பெண்கள் 50க்கு மேற்பட்டோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போது போலீசார் அவர்களை கைது செய்தனர்
இந்து சமய அறநிலைய துறையில் செயலை கண்டித்து சூளை தட்டான்குளம் பகுதியில் தொடரும் 15ம் நாள் வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம் நடந்து வருகிறது.
மேலும் எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற எம்.எல்.ஏ., பரந்தாமன் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியையும் இப்பகுதி மக்களின் குறைகளை சட்டமன்றத்தில் பேசாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்களை சேர்ந்த சிலர் எம்.எல்.ஏ.,வின் முகம் கொண்ட முகமுடி அணிந்து திருநெல்வேலி அல்வா கொடுக்கும் போராட்டம் மேற்கொண்டனர் அப்போது போலீசார் நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்து இருப்பது ஜனநாயக விதி மீறல் அவர்களை விடுதலை செய்ய தட்டான்குளம் பகுதியில் வசிக்கும் 50க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 10க்கு மேற்பட்ட ஆண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட போது அவர்களை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுதலை செய்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட பாரத் இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஆர்.டி.பிரபு, தட்டான்குளம் பகுதி வீட்டு உரிமையாளர் சங்க நிர்வாகி உட்பட நான்கு பேர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

