கட்டுக்கதையும்!
இந்தியா பிரிவினையின் போது இந்தியா மற்றும் நமது அண்டை நாடுகளின் சிறுபான்மை குடிமக்களுக்கு சமூக உரிமைகள் மற்றும் கண்ணியமான வாழ்க்கைச் சூழல் ஆகியன, அவர்களின் மதம் மற்றும் பாரம்பரிய உரிமைகளை உள்ளடக்கும் என்று நம்பப்பட்டது. இருப்பினும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் உரிமைகள் இன்று வரை பாதுகாக்கப்படவில்லை. சிறுபான்மை சமூகத்தவர்களுக்கும் பொது வாழ்வில் பங்கேற்க, சம வாய்ப்பு வழங்குவதன் பொருட்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரதமர்களான நேரு மற்றும் லியாகத் இடையே வரலாறு சிறப்புமிக்க “டெல்லி ஒப்பந்தம்” 1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி கையெழுத்தானது. இதன் மூலம் அனைவருக்கும் பொது வாழ்க்கையில் சம உரிமை வழங்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் நமது அண்டை நாடுகள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்.
தற்போது நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 22 விழுக்காட்டில் இருந்து 07 விழுக்காடாக குறைந்துள்ளது அதேசமயம் இந்தியாவில் சிறுபான்மையினரின் மக்கள் தொகை 23 விழுக்காட்டில் இருந்து 30 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினர்கள் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டுகிறது. அதே சமயம் நம் இந்தியாவில் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தலைமை நீதிபதி போன்ற முக்கியமான அரசியல் சாசன பதவிகளை முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் வகித்துள்ளனர். அதே சமயம் மேற்கண்ட 3 அண்டை நாடுகளும் தங்கள் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மதிக்க தவறிவிட்டன என்பது தெரிகிறது.
மேற்கூறிய காரணங்களால் இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் தேவை உருவானது. ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகியவை இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுச் சான்றுகள் கொண்ட இந்தியாவின் அண்டை நாடுகள் ஆகும்.
ஆப்கானிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு இரண்டின் படி அந்த நாடு தன்னை இஸ்லாமிய நாடாக அறிவிக்கிறது அதே போன்று வங்கதேசமும் பாகிஸ்தானும் தங்களது அரசியல் அமைப்புகளுக்கு உட்பட்டு தங்களை இஸ்லாமிய நாடுகளாக அறிவிக்கின்றனர். இந்தியாவில் எல்லையை ஒட்டியுள்ள இந்த மூன்று நாடுகளின் மத சிறுபான்மையினரின் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் இந்த குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் வசிக்கும் மத சிறுபான்மையினருக்கு நமது நாட்டில் குடியுரிமை வழங்குவதன் மூலம், மேற்கண்ட நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட மத துன்புறுத்தலை மறக்கடித்து அவர்களுக்கு ஒரு புது நம்பிக்கையை ஊட்டுகிறது இந்த திருத்தச் சட்டம். மேலும் 2019 ஆண்டு வரை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்திலிருந்து 560 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அகதிகள் இந்தியாவிற்கு வந்துள்ளனர் என்று தரவுகள் கூறுகிறது.
மேலும் குடியுரிமை திருத்த சட்டம் நமது ஜனநாயக நாடாளுமன்ற செயல்முறைக்கு மதிப்பளித்து பாராளுமன்ற கூட்டுக்குழு பாராளுமன்ற நிலைக்குழு போன்றவற்றின் ஆய்வுகளை கடந்து சட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த குடியுரிமை திருத்த சட்டம் மனிதாபிமான நடவடிக்கைகளை மையமாகக் கொண்டுள்ளது அதனால் இதன் மீது மத ரீதியான கேள்விகளை எழுப்பக் கூடாது இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரானது என்ற தவறான கருத்து உள்ளது எனினும் என் நாட்டு முஸ்லிம்களைப் பற்றி கவலைப்படக்கூடாது. ஏனென்றால் அவர்கள் இந்நாட்டின் குடிமக்கள் ஆவார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் இந்நாட்டு குடிமக்களாகவே நீடித்துக் கொண்டிருப்பார்கள். அதாவது உலகில் எங்கிருந்தும் சட்டவிரோதமாக குடியேறும் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு குடியுரிமை திருத்த சட்டம் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளில் துன்புறுத்தப்பட்டு தங்கள் மதங்களுக்கு உகந்த சூழல் இல்லாத குறிப்பிட்ட வகுப்பினருக்கு ஆனது ஆகும் என்பதே இதற்கு தகுந்த பதிலாகும். இந்த சட்டம் குறிப்பாக இந்திய முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது ஏனெனில் இந்த சட்டம் சில வெளிநாட்டியதற்கு குடியுரிமை மட்டுமே அளிக்கிறது அது எந்த இந்தியரின் குடி உரிமையையும் பறிக்காது. இந்த சட்டம் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் போன்றவர்கள், மேற்கண்ட நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பானது மட்டுமே.
குடியுரிமை சட்டம் 1955-ன் பிரிவு 2 (1)(ஆ) வின்படி கடவுச்சீட்டு நுழைவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் புலம் பெயர்ந்தவர்கள் ஆகியோரை சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று கருதப்படுகிறது. ஆனால் மேற்கண்ட மூன்று நாடுகளில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள் பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் ஆகியோர் சட்டவிரோதமாக குடியேறியவர்களாக கருதப்பட மாட்டார்கள். மேலும் அத்தகைய புலம் பெயர்ந்தோர் குடியுரிமைச் சட்டம் 1955ல் பிரிவு 05 அல்லது 3-வது அட்டவணையில் உள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்த பிறகு குடியுரிமையை பெற்றால், அவர்கள் இந்தியாவுக்கு வந்த தேதியில் இருந்து குடியுரிமை வழங்கப்படும். 2014 டிசம்பர் 31 வரை பல அகதிகள் இந்தியா வந்துள்ளனர் அவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
