LPF யூனியன் மாநில பொதுசெயலாளர் எம்.சண்முகம் அவர்கள் பார்வைக்கு!!!

sen reporter
0

LPF யூனியன் மாநில பொதுசெயலாளர் எம்.சண்முகம் அவர்கள் பார்வைக்கு!!!

தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக LPF யூனியன்களிலிருந்து தெறித்து ஓடும் பணியாளர்கள்.


தேனி மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகமானது ஐந்து இடங்களில் செயல்பட்டு வருவதை தொடர்ந்து LPF யூனியன்களில் உள்ள பணியாளர்கள் தினமும் புலம்புவதும் வேடிக்கையாக காணப்படுகிறது.


1998ம் ஆண்டு முதல் இந்த ஐந்து நுகர்பொருள் வாணிப கழகத்திலும் உள்ள LPF யூனியன்களில் சுமைதூக்கும் தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தற்செயல் பணியாளர்களை சேர்த்து சுமார் 180பேர் வரை இருந்தனர்.


ஆனால், தற்போது நுகர்பொருள் வாணிப கழக LPF யூனியன்களில் சில்லறை காசை தேடுவதுபோல் சுமார் குறைவான எண்ணிக்கையில் உள்ளதாக மட்டும்தான் பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக அதில் குறைவான எண்ணிக்கையில் உள்ள நபர்களில் 11பேரும் உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கடந்த திங்கள்கிழமை 04.0.3.24அன்று கூட LPF யூனியனிலிருந்து சுமை தூக்கும் பணியாளர் ஒருவர் வேறு யூனியனுக்கு மாறிவிட்டதாக தெரியவருகிறது.



தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக LPF யூனியன்களிலிருந்து பணியாளர்கள் ஓடும் காரணம் என்ன? நுகர்பொருள் வாணிப கழகத்தின் LPF யூனியன் பொறுப்பிலிருக்கும் நபரின் செயல்பாடுகள் சரிஇல்லாத காரணத்தாலும், பணியாளர்காளின் கோரிக்கைகளை காதில் வாங்காமலும், மேலும், பணியாளர்களின் கோரிக்கைகளை அரசிற்கு தெரிவிக்க தவறும் அந்த LPF பொறுப்பில் உள்ள நபரால் அனைவரும் வேறு யூனியன்களுக்கு மாறிசெல்வதாக வெளிப்படையாகவே பேச்சு அடிபடுகிறது.


இதுகுறித்து பணியாளர்களிடம் கேட்கும்போது 1998ம் ஆண்டுமுதல் தற்போது வரை நுகர்பொருள் வாணிபகழக LPF யூனியனில் ஒரு நபரே பொறுப்பு வகித்து வருவதும், அவரது செயல்பாடு சரிஇல்லாத காரணத்தாலும்,LPF யூனியனில் உள்ள பணியாளர்கள் புலம்புவதுமே தொடர்நிகழ்வாக உள்ளது தெரியவருகிறது.


குறிப்பாக, LPF யூனியன் பொறுப்பு வகிக்கும் நபரின் செயல்பாடு ஒன்றுமே சரி இல்லை என்று கூறி புதிதாக மாநில பாதுகாப்பு சங்கம் என்ற யூனியனில்  பணியாளர்கள்  இணைவதும் தெரியவருகிறது.


தேனி மாவட்டத்தில் தொழிலாளர்களின் எந்த ஒரு கோரிக்கை என்றாலும் உடனே அரசுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கும் சங்கமாக மாநில பாதுகாப்பு சங்கம் விளங்குகிறது தெரியவந்துள்ளதால் பணியாளர்கள் இந்த சங்கத்தில் இணைந்து மகிழ்ச்சியுடன் உள்ளதாக தெரியவருகிறது.



இதனை கருதி LPF யூனியன் மாநில பொதுசெயலாளர் எம்.சண்முகம் அவர்கள் தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் LPF யூனியன்களில் உள்ள மிச்சம் மீதி இருக்கும் பணியாளர்களை தக்கவைக்க நடவடிக்கை எடுப்பாரா? மேலும்,தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தின் LPF யூனியன் பொறுப்பில் உள்ள நபரை மாற்றம் செய்ய முன்வருவாரா?

பொறுத்திருந்து பார்ப்போம்.



 

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top