பொள்ளாச்சி பேருந்து நிலையத்தின் அருகே பொது கழிப்பறை பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு விளைவிக்க தயாராக இருக்கும் இந்த பொது கழிப்பிடத்தை சுத்தம் செய்து தர வேண்டும் என்று பயணிகள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
மேலும் மது பிரியர்கள் அங்கு வந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொதுமக்கள் பயன்படுத்தப்படும் பொது கழிவிடத்திலும் கூட மது அருந்துவது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் என்று பயணிகளும் பொதுமக்களும் மன வேதனை அடைந்து வருகின்றார்கள்.
இதனை கருதி உடனடியாக நகராட்சி நிர்வாகமானது கழிவறை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றார்கள்.
