தமிழ்நாட்டில் உருவானது புதிய தாலுகா!
தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவாக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை தாலுகாக்களை சீரமைத்து, திருவோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படுகிறது.
காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை மற்றும் 45 வருவாய் கிராமங்களும் திருவோணத்துடன் சேர்க்கப்பட்டுள்ளன.
இன்னும் பல புதிய தாலுகாக்கள் உருவாக வாய்ப்புள்ளது.
