தூத்துக்குடியில் முதல்வர்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.
தொடர்ந்து தூத்துக்குடியில் ஜான் ஜீகன் முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு அமைச்சர் காலை உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் தெய்வேந்திரன், ஜாக்குலின் ஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
