உத்தமபாளையம் தாலுகாவிற்கு உட்பட்ட அனுமந்தன்பட்டியில் உள்ள ஸ்ரீ இராஜலட்சுமி மழலையர் ஆரம்ப பள்ளியில் பரிசளிப்பு விழா நடைபெற்றதை தொடர்ந்து தலைமை காவலர் (குமுளி)P.மாரியப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
முன்னதாக சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை காவலர் மாரியப்பன் அவர்களுக்கு பள்ளியின் செயலாளர், மற்றும் தலைமையாசிரியர் உட்பட ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர்.
இதனை தொடர்ந்து விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு தலைமை காவலர் மாரியப்பன் அவர்கள் பரிசுகள் வழங்கியதோடு விளையாட்டில் மென்மேலும் திறம்பட செயல்படுவது குறித்தும், உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
