சென்னை: எம்.கே.சிவாஜிலிங்கம் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதி!

sen reporter
0


 தமிழ்த் தேசிய  கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலங்கம் சென்னையில் தங்கியிருந்த நிலையில் திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டுள்ளது.


இதையடுத்து உடனடியாக சென்னை - வடபழனியில் உள்ள விஜயா தனியார் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பல்வேறு உடல் உபாதைகள் காரணமாக பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் எம்.கே. சிவாஜிலிங்கம் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் தங்கியிருந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top