தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் பணத்துடன் சென்றால் நினைத்த வரம்

sen reporter
0


 தேனி மாவட்டம் இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் பணத்துடன் சென்றால் நினைத்த வரம் கொடுக்கும் பெண் சார்பு ஆய்வாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் IPS அவர்கள் நடவடிக்கை எடுப்பாரா??

பணக்காரராக இருந்தாலும், பாதிக்கப்பட்டோர் வந்தாலும் இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் அந்த பெண் சார்பு ஆய்வாளரை தனியாக பார்த்தாலே நினைக்கும் காரியம் முடிந்துவிடலாம். பொதுமக்கள் பரபரப்பு பேச்சு.

இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் பொதுமக்களுக்கு CSR காப்பி,முதல் தகவல் அறிக்கை கொடுப்பதில்லை என்றும் குறிப்பிட்ட அந்த பெண் சார்பு ஆய்வாளரிடம் நோட்டை வைத்தால் மட்டும்தான் நினைத்த காரியம் நடக்கும் பட்டி தொட்டி முழுவதும் ஆங்காங்கே பேச்சு.

காவல் நிலையத்தில் பணம் இருந்தால் பிரச்சனை தீரும் பணம் இல்லாதோர் ஓடவேண்டியதுதான் வெளியே சொல்ல முடியாமல் திணறும் சுற்றுவட்டார பொதுமக்கள்.

வீட்டை எரித்த கும்பல்மீது பாதிக்கப்பட்ட நபர் புகார் கொடுத்தால் எதிர்பார்ட்டியிடம் நோட்டை வாங்கிகொண்டு புகார் கொடுத்தவரையே சக்கை சக்கையாக பிழிந்த காவல் நிலைய பெண் சார்பு ஆய்வாளரால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பணம் பத்தும் செய்யும் என்பதைபோல் நாளுக்கு நாள் பொதுமக்கள் பெண் சார்பு ஆய்வாளரால் புலம்பிய வண்ணம் உள்ளனர்.


அந்த பெண் சார்பு ஆய்வாளர் இராயப்பன்பட்டி காவல்நிலையத்தில் பணியில் சேர்ந்ததுமுதல் இன்றுவரை பெண் சார்பு ஆய்வாளரால் காவல் நிலையத்தில் உள்ள அனைவரும் செல்வசெழிப்புடன் இருப்பதாக சுற்றுவட்டார மக்கள் பரவலாக பேசி வருகின்றனர்.

இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் நடப்பது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் IPS அவர்களுக்கே வெளிச்சம்...

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top