திருவாடானை
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அஞ்சுகோட்டை ஊராட்சிக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் கிராமத்தில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயசீலா கண்ணன் ஏற்பாட்டில் ரூ.11,97,000 மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தை ஒன்றிய பெருந்தலைவர் முகம்மது முக்தார் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் திருவாடானை மத்திய திமுக ஒன்றிய
செயலாளர் செங்கமடை சரவணன், இராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை நல அமைப்பு துணை அமைப்பாளர் ஆலம்பாடி துரை.கண்ணன் ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன் ஆகியோர் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்தனர். இந்நிகழ்வில் கிராம மக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
