விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் நடவடிக்கை எடுப்பாரா? மேல்மலையனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட MCராஜா நகர் மக்கள் கோரிக்கை!!!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட MCராஜா தெருவில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது பராமரிப்பு இல்லாமல் மக்கள் நோய்த்தொற்றின் பிடியில் சிக்கியுள்ளனர்.
MCராஜா தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியானது கடந்த 10வருடங்களுக்கு மேல் ஆகியும் பராமரிப்பு இல்லாததால் குடிநீரானது அசுத்தமான நிலையில் காணப்படுகிறது.
மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியில் மூடி ஏதும் இன்றி இருப்பதால் பறவைகள் அசுத்தம் செய்து வருவதாக நகர் மக்கள் புலம்பி வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை நோய்த்தொற்று ஏற்பட்டு அடிக்கடி மருத்துவமனைக்கு சென்றவாறு உள்ளனர்.
இதுகுறித்து MCராஜா நகர் மக்கள் பல ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் கண்டும், காணாமலும் பேரூராட்சி நிர்வாகம் செயல்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
இந்த அசுத்தமான மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியால் மக்களுக்கு பெரிய அளவில் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்முன் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஒற்றை கோரிக்கை விடுத்துள்ளனர்.

