வேலூரில் திருட்டு போன செல்போன்கள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு!
8/29/2024
0
வேலூர் மாவட்ட காவல்துறைக்கு காணாமல் போன செல்போன்கள் பற்றி செல் டிராக்கர் செயலி மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுவரை சுமார் ரூபாய் 2 கோடியே 8 லட்சத்து 67 ஆயிரம் மதிப்புடைய 1092 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் செல் ட்ராக்கர் செயலி மூலம் 160 புகார்கள் பெறப்பட்டு அதில் 110 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் உரியவர்களை அழைத்து அவர்களிடம் அவர்களது செல்போன்களை ஒப்படைத்தார். செல்போன்களை தொலைத்தவர்கள், செல்போன் பறிபோய் மீண்டும் கிடைக்காமல் பரிதவித்தவர்கள் செல்போனை மீட்டுக் கொடுத்த காவல் துறையினருக்கு தங்களது நன்றியினை தெரிவித்துவிட்டு தங்களது செல்போனை பெற்றுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.